100 பேருக்கு திருமணமானால் அதில் 6-10 குழந்தை பாக்கியம் பெறுவதில் சிரமமாக உள்ளது.
கல்யாணத்திற்க்கு பிறகு ஒரு வருடம் முயற்ச்சி செய்து குழந்தை கிடைக்காத போது ,கணவன்,மனைவி இருவரும் தங்களுக்கு ஏதாவது பிரச்னை உள்ளதா ? என்பதை அறிய குழந்தை யின்னை சிகிச்சை அளிக்கும் வசதி உள்ள மருத்துவரிடம் பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.
குழந்தை இல்லாத 100 தம்பதிகளில், 40 பேருக்கு கணவணிடம் குறைபாடும், 40 பேருக்கு மனைவியிடம் குறைபாடும்,10 பேருக்கு இரண்டு பேரிடமும், 10 பேருக்கு கண்டுபிடிக்க முடியாத குறைபாடும் உள்ளது.
ஆண்களுக்கு உடல் பருமண்,சக்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், ஹார்மோன் குறைபாடு ,விந்து அணுக்கள் குறைபாடு,மன அழுத்தம் என பல காரணங்கள் உள்ளது , இதற்கு இன்சுலின் எதிர்ப்பு தன்மை முக்கியமான காரணமாக உள்ளது.
பெண்களுக்கு இன்சுலின் எதிர்ப்பு தன்மையினால் உடல் பருமன்,சினை பையில் நீர் கட்டி (PCOD), மாத விடாய் கோளாறுகள், தைராய்டு சுரப்பி குறைவாக சுரத்தல்,ஆண்களுக்கான டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் பெண்களுக்கு அதிகமாக சுரத்தல்..