
டாக்டர். ராஜா ஏகம்பரம்,
குழந்தைகள் நல மருத்துவர் மற்றும் உணவு ஆலோசகர், மிஸஸ் மருத்துவமனை, பொள்ளாச்சி.
(Dr. Christian Bernard ) டாக்டர் கிறிஸ்டியன் பெர்னார்ட் உலகத்தில் முதலாவதாக இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்தவர். இவர் என்ன கூறுகிறார் என்றால் நான் 150 இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்து 150 பேரை காப்பாற்றி உள்ளேன்.நான் வருமுன் காக்கும் சிகிச்சை செய்திருந்தால் 150 மில்லியன் மக்களை இருதய நோயிலிருந்து காப்பாற்ற இருக்கலாம் என்று கூறியிருக்கிறார்.
இது சாத்தியமா?? சாத்தியமே,
நாம் கடந்த 50 ஆண்டுகளில் வாடழும் இயந்திர வாழ்க்கையில் நம்முடைய வாழ்க்கை முறையை தலைகீழாக மாற்றி அதன் மூலம் பல உடல் பிரச்சனைகளுக்கு உள்ளாகியுள்ளோம்.
பணம் சம்பாதிக்க வேண்டும் என்று உடல் ஓய்வு இல்லாமல் உழைப்பது , சரியாமல் ஓய்வு எடுக்காமல் இருப்பது, அதனால் ஏற்படும் மன உளைச்சல், உடல் சோர்வு, நல்ல உணவுகளை சாப்பிடாமல் இருப்பது, உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, மது, சிகரெட் பிடிப்பது, அதிக நேரம் மொபைல் மற்றும் டிவி உபயோகிப்பதால் உடல் உழைப்பு இல்லாமல் இருப்பது.
இதனால் நம்முடைய உடல் எடை கூடி மெட்டபாலிக் சிண்ட்ரோம் என்று நம்முடைய உடலில் பல பிரச்சனைகள் உருவாகிறது.
மெட்டபாலிக் சிண்ட்ரோம் என்றால் உடல் எடை கூடுவதால் ஏற்படும் பிரச்சினைகள் அனைத்தும் சேர்ந்தது . உடல் எடை கூடுவதால் நமக்கு சர்க்கரை நோய் ,உயர் இரத்த அழுத்தம், மூட்டு தேய்மானம், ஈரலில் கொழுப்பு படிவதால் ஏற்படும் பிரச்சினைகள், ஹார்மோன் கோளாறினால் ஏற்படும் பிசிஓடி -குழந்தையின்மை பிரச்சனைகள், இருதய நோய்கள் மற்றும் கேன்சர் வர வாய்ப்புள்ளது.
இவை அனைத்தும் வராமல் நம்மை எப்படி பாதுகாத்துக் கொள்ள முடியும்??
1. தினமும் 7 முதல் 8 மணி நேரம் வரை உறங்க வேண்டும். சரியாக தூங்காமல் இருப்பவர்களுக்கு ஸ்டிரஸ் ஹார்மோன்ஸ் அதிகமாகி உடல் எடை கூட வாய்ப்பிருக்கிறது.
2. அதிக மாவு சத்து உள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது.அடிக்கடி காபி, டீ, ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. உடலுக்கு நன்மை செய்யும் நார்சத்துள்ள குறைந்த மாவு சத்து உள்ள உணவுகளை உணவுகளை சாப்பிடுவது நல்லது.
3. தினமும் தண்ணீர் 3 முதல் 4 லிட்டர் வரை குடிப்பது நல்லது. (இருதயம் மற்றும் சிறுநீரக கோளாறு உள்ளவர்கள் உங்கள் மருத்துவர் சொன்ன அளவு நீர் அருந்த வேண்டும்)
4. தினமும் உங்களால் முடிந்த உடற்பயிற்சிகள் அரைமணி நேரத்திலிருந்து ஒருமணி நேரம் வரை செய்வது நல்லது. (உதாரணமாக நடைப்பயிற்சி , யோகாசனம், நீச்சல், சைக்கிள் ஓட்டுவது ,விளையாடுவது , ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்வது )
5.இருதயத்திற்கு கெடுதல் செய்யாத நல்ல கொழுப்பு உணவுகளை உண்பது மற்றும் உடலுக்கு தேவையான புரதச் சத்துள்ள உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. புரத சத்து உள்ள உணவுகளை தேவையான அளவு சேர்க்கும் போது நமக்கு பசியைத் தாங்கும் தன்மை ஏற்படும். புரத சத்து உணவுகளை தவிர்க்கும் போது அடிக்கடி பசி எடுப்பதால் நாம் மாவு சத்து உள்ள உணவுகளை(திண்பன்டங்கள்) அதிகமாக சாப்பிடுகிறோம்.
6. மதிய நேரத்தில் 10-15 நிமிடம் வெயில் நம்முடைய தோலில் படும் படி இருந்தால் நமக்கு இயற்கையாகவே வைட்டமின் டி சத்துக்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
7. மது அருந்தும் பழக்கம் மற்றும் சிகரெட் பிடிப்பதை தவிர்ப்பது நல்லது.
8.உங்களுக்கு ஏற்கனவே உடலில் உள்ள உபாதைகளை மருத்துவரிடம் பரிசோதனை செய்து அதற்கான மருந்து, மாத்திரைகளை அவர் சொல்வது போல எடுத்துக்கொள்வது நல்லது.
இவ்வாறு செய்வதன் மூலம் நம்முடைய உடல் எடையை ஆரோக்கியமாக குறைக்க முடியும். சர்க்கரை அளவுகளை ,உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும்.
கட்டுப்பாடில்லாத உயர் ரத்தஅழுத்தம் ,சர்க்கரை அளவுகள் இருதய நோய் வருவதற்கு காரணமாக உள்ளது. மாரடைப்பு மற்றும் பக்கவாதம் அதிகமாக சர்க்கரை நோய் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு ஏற்படுகிறது.
நல்ல உணவு முறை ,உடற்பயிற்சி , உடலுக்கு ஓய்வு அளிப்பது டென்ஷனை குறைப்பது மூலம் இருதயக் கோளாறு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்வதில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ள முடியும்.
வரும் முன் காப்போம்
முடிவு உங்கள் கையில்.