
(Factors influencing diabetes management)
டாக்டர். ராஜா ஏகாம்பரம்,
குழந்தைகள் நல மருத்துவர் மற்றும் உணவு ஆலோசகர்,
மிஸஸ் மருத்துவமனை,
பொள்ளாச்சி.
1. நோயாளியின் வயது மற்றும் அவருடைய எதிர்பார்கப்படும் வாழ்நாள்
( Patients age ,life expectancy)
2. இவர் எவ்வளவு நாட்களாக சர்க்கரை நோயியினால் பாதிக்கப்பட்டுள்ளார் (Diabetes duration)
3. உடல் எடை ( Body weight)
4. அவருடைய கடந்தகால சர்க்கரை அளவு கட்டுப்பாடு(Glycemic control history)
5. சர்க்கரை நோயினால் உடலில் ஏற்பட்ட மற்ற பாதிப்புகள்(co morbid conditions)
6. சர்க்கரை அளவு குறைந்து பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு (Risk of hypoglycemia)
7. அவருடைய வேலையின் தன்மை, முறையாக பைத்தியம் செய்யும் தன்மை (profession , compliance factors)
8. குடும்பத்தில் உள்ளவர்கள் சிகிச்சைக்கு கொடுக்கும் ஒத்துழைப்பு (Family support for treatment). 9.மனநலபிரச்சனைகள்
(psychological status).
10. மருத்துவ செலவுகள் செய்யும் திறன் (Economic status )
அமெரிக்கா சர்க்கரைநோய் சங்கம் மூன்று மாத சர்க்கரை அளவுகள்(Blood Hba1c) 7-8 வரை இருக்கலாம் என்று கூறியுள்ளார்கள். இது அனைத்து வயதினருக்கும் அல்ல. சர்க்கரை நோய் வருவதற்கு முன் கட்டத்தில் உள்ளவர்கள் (prediabetes), சிறிய வயதினர் (young age),சக்கரை நோய் ஆரம்பகட்டத்தில் கண்டுபிடிக்க பட்டவர்கள் (newly detected diabetes) முறையாக உணவுக் கட்டுப்பாடுகள், மாத்திரைகள் மற்றும் உடற்பயிற்சி மூலம் மூன்று மாத சர்க்கரை அளவுகளை Hba1c -7க்குள் வைக்கும்படி அறிவுறுத்தி உள்ளார்கள்.
வயதானவர்கள், சர்க்கரை நோயினால் மற்ற உறுப்புகள் பாதிக்கப்பட்டவர்கள், இரவு நேரத்தில் தன் முழித்து வேலை செய்பவர்கள், குறைந்த சர்க்கரை அளவின் மூலம் மயக்க நிலையை அடையும் தன்மை உடையவர்கள் மூன்று மாத சர்க்கரை அளவுகளை ஏழு முதல் எட்டு வரை வைத்துக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளார்கள். குண்டாக இருப்பவர்களுக்கு(obese diabetic) சர்க்கரை நோய் குறையும் பொழுது உடல் எடையும் குறையும் அதற்கு ஏதுவாக சில மாத்திரைகளை பரிந்துரைத்துள்ளார்.
சக்கரை அளவு தாழ்வு நிலையை (Hypoglycemia)அடைந்து மயக்க நிலையை அடையாமல் இருக்க சில மாத்திரைகளைப் பரிந்துரைக்கிறார்கள். வசதியில்லாதவர்கள் வாங்கும்படி சில சர்க்கரை நோய் மருந்துகள் விலையை குறைத்து கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்கள்.
சக்கரை நோய் யாருக்கு இல்லை என்று பரிசோதனையில் சொல்கிறோம் :
1. மூன்று மாத சர்க்கரை அளவுகள் Hba1c- 5.7 க்கு கீழே இருப்பது.
2. சாப்பிடாமல் எடுக்கப்பட்ட இரத்த சர்க்கரை அளவுகள் 99 க்குள் இருப்பது.
3.GTT-75 கிராம் சர்க்கரை கொடுத்து இரண்டு மணி நேரம் கழித்தே பரிசோதிக்கும்போது சக்கரை அளவுகள்-140 க்கு கீழ் இருப்பது .
யாருக்கு சக்கரை நோய் வருவதற்கு முந்தைய(prediabetes)நிலையில் உள்ளார்கள் என்று பரிசோதனையில் சொல்கிறோம் :
1. மூன்று மாத சர்க்கரை அளவுகள் Hba1c- 5.7 முதல்-6.4 க்கு கீழே இருப்பது.
2. சாப்பிடாமல் எடுக்கப்பட்ட இரத்த சர்க்கரை அளவுகள் 100 லிருந்து 125க்குள் இருப்பது.
3.GTT-75 கிராம் சர்க்கரை கொடுத்து இரண்டு மணி நேரம் கழித்தே பரிசோதிக்கும்போது சக்கரை அளவுகள்-140 முதல் 199 க்கு கீழ் இருப்பது .
சக்கரை நோய் உள்ளது என்று பரிசோதனையில் யாருக்கு சொல்கிறோம் :
1. மூன்று மாத சர்க்கரை அளவுகள் Hba1c- 6.4க்கு மேல் இருப்பது.
2. சாப்பிடாமல் எடுக்கப்பட்ட இரத்த சர்க்கரை அளவுகள் 126க்கு மேல் இருப்பது.
3.GTT-75 கிராம் சர்க்கரை கொடுத்து இரண்டு மணி நேரம் கழித்தே பரிசோதிக்கும்போது சக்கரை அளவுகள்-200 க்கு மேல் இருப்பது .
நம்முடைய ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு முகநூல் குடும்பத்தில் கூறப்படும் பேலியோ உணவுமுறையை( சர்க்கரை நோய் உள்ளவர்கள், சர்க்கரை நோய் வருவதற்கு முன் நிலையில் உள்ளவர்கள் ,தன் குடும்பத்தில் யாருக்காவது சர்க்கரை நோய் இருந்து தனக்கு பின்னாளில் சர்க்கரை நோய் வரும் பாதிப்பு உள்ளது என்று நினைப்பவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள்) முறையான ரத்த பரிசோதனைக்கு பிறகு ஆலோசனையுடன் ஆரம்பிக்கலாம். வயதிற்கு தகுந்த உடற்பயிற்சி (நடை,சைக்கிள் ஓட்டுதல், ஓடுதல், விளையாடுதல், யோகாசனம், ஜிம் உடற்பயிற்சி) செய்தால் நல்லது . சர்க்கரை நோய் மருத்துவர்கள் கொடுத்த மருந்துகளுடன் தினமும் தங்களுடைய சர்க்கரை அளவுகளை பரிசோதனை செய்து அதை தங்களுடைய மருத்துவர்களிடம் காண்பித்து அதற்கு தகுந்தாற்போல் சக்கரை மாத்திரையை அல்லது இன்சுலினை மருத்துவர் ஆலோசனைப்படி குறைத்துக் கொண்டு வரலாம். சிலரால் மாத்திரைகள் இன்சுலின் முழுமையாக நிறுத்தக் கூட முடியும். சிலருக்கு மாத்திரை அளவுகளைக் குறைக்க முடியும்.
நம்முடைய குடும்பத்தில் பலர் மூன்று மாத சர்க்கரை அளவுகளை (Hba1c -6 ) 6 க்கு கீழே வைத்துள்ளார்கள். இதனால் சர்க்கரை நோயினால் வரக் கூடிய உள்ளுறுப்பு பாதிப்புகளிலிருந்து அனைவரும் தங்களை காப்பாற்றிக் கொள்கின்றனர்.
சக்கரை நோய்க்கு பேலியோ உணவு ஆரம்பிப்பதற்கு முன்பாக சர்க்கரை நோயினால் நம்முடைய உடலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ரத்தப்பரிசோதனை மூலம் ஸ்கேன் மற்றும் இசிஜி மூலம் கண்டறிந்து ஏற்கனவே ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு மருத்துவர் ஆலோசனை ஆலோசனையுடன் மாத்திரைகளுடன் உணவு முறையை ஆரம்பிப்பது நல்லது.
பேலியோ உணவின் மூலம் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் சர்க்கரை நோய் இல்லாதவர்கள் போல தங்கள் சக்கரை அளவுகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்கள்.
இது அனைவராலும் முடியும். அமெரிக்க சர்க்கரை நோய் கழகம் கூறியுள்ள மூன்று மாத சர்க்கரை அளவுக்கு குறைவாகவே நம்முடைய சர்க்கரை அளவுகளை வாழ்நாள் முழுவதும் வைத்துக் கொள்ள முடியும்.
மனமிருந்தால் மார்கம் உண்டு.